Saturday, May 18, 2013

samayal

                                                                             

கோதுமை-மாவு-அல்வா                                              

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 டம்ளர்
தண்ணீர் - 1 1/4 டம்ளர்
சர்க்கரை - 2 டம்ளர்
கேசரிப்பவுடர் - 1/4 ஸ்பூன்
நெய் - 2 டம்ளர்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்

செய்முறை

செய்முறை:
கோதுமை மாவை ஒரு கப் நீரில் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை 1/4 டம்ளர் நீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும்.
அதில் கேசரி பவுடர் சேர்த்து, கோதுமைக் கரைசலையும் ஊற்றி கொள்ளவும்.
பிறகு அதில் நன்கு உருக்கிய நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி போட்டுக் கலக்கி இறக்கி வைக்கவும்.
சுவையான் அல்வா ரெடி


கேரட்-அல்வா

தேவையான பொருட்கள்

1 .கேரட் 2
2 .250 கிராம் ரவை
3 .சுகர்
4 .ஒரு கப் பால்
5 .உலந்த முந்திரி 5
6 .அன்டிப்பருப்பு 5
7 . பசு நெய் இரண்டு கரண்டி
8 .தண்ணீர் அளவுக்கு

செய்முறை

எளிய முறையில் ருசியான கேரட் அல்வா
செய்முறை :
முதலில் கேரட்டை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும்
அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை நாற்றாக கொதிக்கவைத்து அதில் ரவையை சிறிது சிறிதாக இடவும்
அடிபிடிக்காமல் இருக்க கரண்டியால் இளக்கி கொள்ளவும் ,ரவை நன்றாக வெந்தவுடன் அதில் அரைத்த கேரட்டை போடவும் பிறகுஉலர்ந்த முந்திரி மற்றும் அண்டிப்பருப்பை இடவுன் பிறகு இரண்டு
அல்லது ஐந்து நிமிடம் வரை நன்றாகவேகவிடவும் பிறகு அதில் பாலை ஊற்றவும் ஊற்றிய பால்
பொங்கியவுடன் நெய்யை இட்டு கிண்டவும் பிறகு அடுப்பை விட்டு இறக்கி அதனை ஒரு பாத்திரத்தில் இடவும்
சுவையான கேரட் அல்வா ரெடி
அரை மணி நேரம் கழித்து சாப்பிடலாம்
அளவோடு உண் நலமோடு வாழ்




எண்ணெய்-கத்திரிக்காய்-குழம்பு

தேவையான பொருட்கள்

சிறியகத்திரிக்காய் 1/4 கிலோ,
சிறியஉருளைக்கிழங்கு 100 கிராம்
சிறியவெங்காயம் 1/4 கிலோ
அரைக்கதேவையானபொருட்கள்;‍‍‍
மிளகாய்வற்றல் 6,
மிள்கு 1 மேச்சைக்கரண்டி,
தனியா 1 மேசைக்கரண்டி,
வெந்தயம் சிறிது,
சீரகம்1 தேக்கரண்டி,
துவரம்பருப்பு 1தேக்கரண்டி,
பச்சரிசி 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 4 அல்லது 5 மேசைக்கரண்டி

செய்முறை

அரைக்ககொடுத்துள்ள பொருட்களை  வாணலியில் சிறிது   எண்ணெய்  ஊற்றி தனித்தனியாக‌    வறுத்துக்கொள்ளவும்
அதனுடன் சிறிய‌  வெங்காயம்  3 அல்லதுசேர்த்து    விழுதாகஅரைத்துக்கொள்ளவும்
வெங்காயத்தை பொடியாக‌  அரிந்து வைத்துக்கொள்ளவும்
கத்திரிக்கய்களை நன்கு   கழுவி  காம்பை எடுத்துவிட்டு  பின் பக்கமாக‌  நான்காகவகுந்து கொண்டு அரைத்த‌   விழுதுடன் சிறிது உப்பும்  நல்லெண்ணெய் 1 தேக்கரண்டியும் கலந்து  ஒவ்வொரு கத்திரிக்காயிலும்  அடைத்து  வாணலியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு  உளுந்தம்பருப்பு  கறிவேப்பிலை  தாளித்து   அரிந்து  வைத்துள்ள‌  வெங்காயத்தை     சேர்த்து   பொன்னிறமாக‌  வதக்கவும்
பின்பு  கத்திரிக்காய்களையும்  சேர்த்து  நன்றாக‌  வதக்கிக் கொண்டு புளியைக் கரைத்து வடிகட்டி  ஊற்றி தேவையான‌           உப்பு   சேர்த்து   நன்றாக‌   கொதித்தவுடன்  வேக‌  வைத்துள்ள‌  உருளைக்கிழங்குகளை  தோலை  நீக்கி  முழுதாக‌  அப்படியே  குழம்பில்  சேர்த்து 5 நிமிடங்கள்  கொதித்த பின்பு   இறக்கி விடவும்
இதற்கு side dish ஆக‌   உளுந்தம்  பருப்பை  வேகவைத்து நன்கு  மசித்து  சிறிது  தேங்காய்  1 சிறியவெங்காயம்  சிறிது  சீரகம்  இவற்றை அரைத்து  பருப்புடன்  கலந்து  கொதிக்கவைத்து  கடுகு  உளுந்தம் பருப்பு  கறிவேப்பிலை  தாளித்து  தொட்டுக் கொள்ளலாம்

வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்

தேவையானப் பொருட்கள்:
புளிஒரு கைப்பிடி அளவு
சின்ன வெங்கயம் – 10
பூண்டு – 10
சுண்டைக்காய் வத்தல்ஒரு கைப்பிடி அளவு
மணத்தக்காளி வத்தல்ஒரு கைப்பிடி அளவு
உப்புதேவையான அளவு
நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்(நல்ல எண்ணெய் தான் இதற்கு நன்றாக இருக்கும்.)
மஞ்சள் பொடிசிறிது
கடுகுசிறிது
உளுந்துசிறிது

செய்முறை


வறுத்து அரைக்க :
காய்ந்த மிளகாய் – 5  அல்லது 6
மல்லி விதை – 2  டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெந்தயம் – 10 எண்ணம்

செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை,துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு சிவக்க(பிரவுன்) வறுக்க வேண்டும்.  (பிரவுன் கலராக  வறுத்தால் தான் குழம்பு நல்ல பிரவுன் கலராக வரும்)
வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசியஅரைத்து 
கொள்ளவும்.
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு வாணலியில் இருந்து எடுத்து தனியாக எடுத்து விடவும்.
அதே எண்ணையில் கடுகு, உளுந்து தாளிக்கவும்.
பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விடவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
இதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும்.
கொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்க்கவும்.
கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும்.

நன்கு வற்றிய பிறகு இறக்கவும்.
சூடான சாதத்துடன் வத்தக் குழம்பு, நல்ல எண்ணெய் விட்டு பிசைந்துசுட்ட அப்பளத்துடன் சாப்பிடலாம். மிக அருமையாக இருக்கும்.

சுண்டைக்காய் வத்தல்மணத்தக்காளி வத்தலுக்கு பதிலாக முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்தும் சேர்த்தும் செய்யலாம்.

No comments:

Post a Comment